
இஸ்ரேல் மீது கடந்த வருடம் அக்டோபர் மாதம் கமாஸ் அமைப்பினர் திடீரென தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் காசா மீது தொடர்ந்து போர் தொடுத்த வருகிறது. இஸ்ரேலை சேர்ந்தவர்களை காசா அமைப்பினர் பிணைய கைதிகளாக பிடித்து வைத்துள்ள நிலையில் அவர்களை முழுமையாக மீட்கும் வரை போரை நிறுத்த மாட்டோம் என்று இஸ்ரேல் போரை ஆரம்பித்த நிலையில் கமாஸ் அமைப்பை முற்றிலும் ஒழிக்கும் வரை போரை நிறுத்த மாட்டோம் என்று அறிவித்துள்ளது. இந்த போரினால் காசாவில் ஏராளமான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பாலஸ்தீன சிறுவன் ஒருவன் போரை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்து கதறி அழுத வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி பலரது மனதையும் உருக வைத்துள்ளது. அந்த வீடியோவில் தயவுசெய்து போரை நிறுத்துங்கள். இங்கு மனிதர்களை பார்க்க முடியல. இங்கு எங்களுக்கென எதுவும் இல்லை. நாங்கள் தொடர்ந்து இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறோம். காசாவில் மக்கள் மடிந்து வரும் நிலையில் உலகம் எங்களிடம் பொய் சொல்கிறது. அவர்கள் இது ஆக்கிரமிப்பு என்று கூறுகிறார்களே தவிர உண்மையை சொல்வதில்லை என்று கதறி அழுதபடியே பேசியுள்ளான். மேலும் இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram