தாய்லாந்தின் தக் மாகாணத்தில் மாபெரும் இசை நிகழ்ச்சி நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் சுமார் ஒன்பதாயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டு தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்ததாகவும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இசை நிகழ்ச்சி நடந்தது கிளர்ச்சியாளர்கள் செயல்பட்டு வரும் மியான்மர் எல்லைக்கு அருகே ஆகும். இதனால் கேஎன்யு கிளர்ச்சியாளர்கள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி இருக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் இதற்கு கிளர்ச்சியாளர்கள் குழு மறுப்பு தெரிவித்துள்ளது. இதனிடையே காவல்துறை அதிகாரிகள் இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.