
இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழகம் கேட்ட நிதியை உங்களால் தர முடியவில்லை. தனியார் பள்ளி நடத்துபவர்கள் சட்ட விரோதமாகவா நடத்துகிறார்கள்? தனியார் பள்ளி நடத்துபவர்கள் மத்திய அரசிடம் உரிய அனுமதி பெற்று நடத்துகின்றனர். தனியார் பள்ளிகளில் இலவச உணவு கொடுக்கப்படுகின்றதா அல்லது இலவச சீருடையாவது கொடுக்கிறார்களா. முன்மொழி கொள்கை என்பது அரசு பள்ளியோடு தொடர்புடையது. அண்ணாமலை எங்கள் வீட்டில் சுவரொட்டிகள் ஒட்டப்படுவதாக சொல்லி இருக்கிறார். முடிந்தால் பாஜக தலைவருக்கு உண்மையிலேயே தைரியம் இருந்தால் அறிவாலயத்துக்கு அல்ல, அண்ணா சாலை பக்கம் வர சொல்லுங்கள். நிதியை பெற்றுத்தர துப்பில்லாதவர்களுக்கு சவால் விடுவதில் ஒன்றும் குறைச்சல் இல்லை என்று உதயநிதி ஆவேசமாக பேசினார்.
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அண்ணா சாலையில் எந்த இடத்திற்கு எந்த நேரத்திற்கு வர வேண்டும் என்று தெளிவாக சொல்ல சொல்லுங்க. பொதுவா அண்ணாச்சாலை என்று சொல்லாமல் சரியாக எந்த இடத்திற்கு வர வேண்டும் என்று நேரத்தை குறித்து விட்டு சொல்ல சொல்லுங்கள். நான் பாஜகவின் தொண்டர்கள் யாரும் இல்லாமல் தன்னந்தனியாக ஒற்றை ஆளாக வரத் தயார். உங்களால் முடிந்தால் மொத்த திமுக படையையும் மொத்த தமிழக போலீஸ் படையையும் வைத்து என்னை தடுத்து பாருங்கள் என்று உதயநிதிக்கு அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.