புதுச்சேரியில் இடி மின்னலுடன் மழை பெய்து வருவதால் கிராமப்புறங்களில் ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்

புதுச்சேரியில் திருக்கனூர், வில்லியனூர், சேதாரப்பட்டு, மண்ணாடு பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி வீணாகி இருக்கிறது.

இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.