தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. அதன் பிறகு மெர்சல், தெறி, பிகில் உள்ளிட்ட படங்களை இயக்கினார். அதன் பிறகு பாலிவுட்டில் ஜவான் திரைப்படத்தை இயக்கிய நிலையில் அந்த படம் ஆயிரம் கோடி வரை வசூல் சாதனை புரிந்தது. இயக்குனர் அட்லி இதுவரை இயக்கிய அனைத்து படங்களும் ஹிட் தான்.

 

 

View this post on Instagram

 

A post shared by Behind Talkies (@behindtalkies)

இவர் அடுத்ததாக அல்லு அர்ஜுனுடன்  இணைந்து புதிய படத்தை இயக்குகிறார். இந்நிலையில் இயக்குனர் அட்லியை வடக்கு போட்டோகிராபர்கள் அதாவது வட மாநில போட்டோகிராபர்கள் இட்லி சார் இட்லி சார் என்று கூறிய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. அவர்கள் அட்லியின் பெயரை தவறாக இட்லி என்று கூறிய நிலையில் அவர்களுக்கு சிரித்தபடியே அட்லி போட்டோக்கு போஸ் கொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றுவிட்டார். மேலும் இது தொடர்பான வீடியோஸ் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.