
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக ஏகே 62 திரைப்படத்தில் அஜித் நடிக்க உள்ளார். அதே சமயம் சமீபத்தில் நேபாளம் நாட்டிற்கு பைக் ரைடு சென்று இருந்தார். இந்நிலையில் கால்பந்தாட்ட பயிற்சி மேற்கொண்டு வரும் நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக்கின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் குட்டி ரொனால்டோ மாதிரி குட்டி தல விளையாடுகிறார் என கமெண்ட் செய்து புகைப்படத்தை இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.