
தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரக்கூடிய கீர்த்தி ஷெட்டி “உப்பென்னா’ திரைப்படம் வாயிலாக திரையுலகிற்கு அறிமுகமானார். இதையடுத்து ஷியாம் சிங்கா ராய், தி வாரியர் உள்ளிட்ட திரைப்படங்களின் வாயிலாக கவனம் ஈர்த்தார். இப்போது டைரக்டர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கஸ்டடி படத்தில் நாகசைதன்யாவிற்கு ஜோடியாக நடித்து உள்ளார் கீர்த்தி ஷெட்டி.
இந்த நிலையில் தற்போது பல சினிமா வாய்ப்புகள் இவருடைய வீட்டு கதவை தட்டிக் கொண்டிருக்கும் நிலையில் நாளுக்கு நாள் இவருடைய ரசிகர் கூட்டமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இன்ஸ்டாவில் மட்டும் இவரை ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பின் தொடர்ந்து வருகின்றார்கள். இந்த நிலையில் கீர்த்தி ஷெட்டி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சியில் தான் நடித்த பாடல் ஒன்றுக்கு சூப்பரான நடனமாடியுள்ளார். இது குறித்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
🎶come on baby, let's go on the bulletuuuu🎶 #KrithiShetty sultry dance moves on stage in a sleeveless transparent saree 🤤👄❤️ @IamKrithiShetty #Custody pic.twitter.com/KJmKQJ9dKX
— FLL-Films Love Life (@FilmsLoveLife) May 10, 2023