நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு இணையதளம் மூலமாக நூல் வாங்குபவர்களுக்கு தபால் செலவு இலவசம் என்று சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் அறிவித்துள்ளது. ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் சார்பாக ஆன்மீக நூல்கள் வெளியிடப்பட்டு வரும் நிலையில் சுவாமி விவேகானந்தர், பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர், அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் கருத்துக்களை கொண்ட நூல்கள் தமிழ் மற்றும் ஆங்கில ம் என மொழிபெயர்ப்பு நூல்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் மடத்தின் சார்பாக வெளியிடப்பட்டுள்ளன. இந்த நிலையில் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி வரை மடத்தின் இணையதளம் மூலமாக புத்தகங்களை வாங்குபவர்களுக்கு தபால் செலவு இலவச என அறிவிக்கப்பட்டுள்ளது.