டெல்லியில் தேர்வு எழுதிய ஒரு மாணவர் இதயம் தொடர்பான கேள்விக்கு அளித்த பதில் நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இதயம் பற்றிய வரைபடம் வரைந்து அதன் பாகங்களை குறிப்பிடுமாறு தேர்வில் கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது. இந்த கேள்விக்கு அந்த மாணவர் இதயம் படத்தை வரைந்து அதில் இதயத்தின் பாகங்களை குறிப்பதற்கு பதிலாக தன் மனதில் உள்ள பெண்களின் பெயர்களை எழுதியுள்ளார். அதாவது அதில் ஹரிதா, நமீதா, பூஜா, ரூபா, பிரியா ஆகியோர்களின் பெயர்களை குறிப்பிட்டு என் மனதில் இடம் பிடித்தவர்கள் என்று  பதிவிட்டுள்ளார்.

அதோடு ஒவ்வொரு பெயர்களுக்கும் ஒரு விளக்கத்தையும் கொடுத்துள்ளார். அதாவது இன்ஸ்டாகிராமில் சாட்டிங் செய்யும் தோழி என பிரியாவை குறிப்பிட்டுள்ள அவர், ரூபாவை அழகானவர் மற்றும் snapchat இல் சாட்டிங் செய்யும் தோழி என்று குறிப்பிட்டுள்ளார். அதன் பிறகு நமீதாவை பெரிய கண்கள் மற்றும் நீண்ட தலை முடி உடைய அழகான பெண்கள் என்று குறிப்பிட்டுள்ளார். அதன்பிறகு பூஜாவை முன்னாள் காதலி என குறிப்பிட்ட அவர் அழுகின்ற கண்களுக்கான படத்தை பக்கத்தில் வரைந்துள்ளார். ஹரிதா என்னுடைய வகுப்புத் தோழி என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் இதனை பார்த்த ஆசிரியர் மாணவரிடம் பெற்றோரை அழைத்து வா என கூறியதோடு 10-க்கு பூஜ்ஜியம் மதிப்பெண்கள் வழங்கியுள்ளார்.