பாகிஸ்தான் நாட்டில் whatsapp குழுவில் இருந்து நீக்கியதால் அட்மின் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒரு whatsapp குழுவில் பலர் இருந்துள்ளனர். இந்த குழுவின் அட்மினாக முஸ்டாக் அகமது என்பவர் இருந்தார். இவர் அந்த குரூப்பில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அஸ்பக் என்பவரை குரூப்பில் இருந்து நீக்கினார்.

இதனால் ஆத்திரமடைந்த அஸ்பக், அகமதுவை பெஷாவர் நகருக்கு தேடிச் சென்றார். அவரைப் பார்த்ததும் அஸ்வக் தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் அவரை சுட்டு கொலை செய்தார். இது தொடர்பாக கொலை செய்யப்பட்டவரின் சகோதரர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள அஸ்பக்கை தேடி வருகிறார்கள்.