சென்னையில் விநாயகபுரம் என்ற பகுதியில் ரத்னகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி ராணி. இவர்களுக்கு 10 வயதில் சிறப்பு குழந்தையான கீர்த்தி சபரீஸ்கர் என்ற மகன் இருந்தார். சிறப்பு குழந்தையான அவருக்கு பெற்றோர் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை அளித்து வந்தனர். இதையடுத்து மருத்துவர் சிறுவனுக்கு நீச்சல் பயிற்சி அளிக்குமாறு அவரது பெற்றோரிடத்தில் கூறினார். மருத்துவரின் ஆலோசனையின் படி சிறுவனின் பெற்றோர் தனியார் ஹோட்டல் ஒன்றில் அமைந்துள்ள நீச்சல் குளத்திற்கு வாரம் இருமுறை அழைத்து சென்றுவருகின்றனர்.

இந்நிலையில் சம்பவநாளுன்று சிறுவனை பெற்றோர் நீச்சல் குளத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பயிற்சியாளர் சிறுவனுக்கு பயிற்சி அளித்து வந்துள்ளார். பின்பு சிறுவன் சிறிது நேரத்திற்கு பயிற்சியாளர் இல்லாமல் தனியாக நீச்சல் குளத்தில் இருந்துள்ளான். இதனால் சிறுவனின் தாயார் சிறுவன் தனியாக இருப்பதால் அவரை கவனித்து வந்துள்ளார். அதன்பின் சிறுவனுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்ட நிலையில் அவர் நீருக்குள் மூழ்கினான்.

இதைப் பார்த்து அவரது தாயார் பயிற்சியாளரின் உதவியோடு சிறுவனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பேச்சு மூச்சின்றி கிடந்த சிறுவனை பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என கூறினர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சிறுவனை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறையினர் இச்சம்பவத்தை பற்றி வழக்கு பதிவு செய்து தனியார் நிறுவனத்தின் மேனேஜர் மற்றும் பயிற்சியாளரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.