
சென்னை தேமுதிக அலுவலகத்தில் உள்ள விஜய்காந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆஃப் ரெகார்ட்ஸ் சார்பாக உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் 125 நாட்களில் தமிழகம் முழுவதும் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர். அஞ்சலி செலுத்த வருபவர்களுக்கு உணவு வழங்கும் உலகின் முதல் நினைவிடமாக விஜயகாந்தின் நினைவிடம் போற்றப்படுகின்றது. இதனால் உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது.