கொல்கத்தாவின் ஷாலிமர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்னை நோக்கி வந்த போது கோரமண்டல் எக்ஸ்பிரஸ், தடம் புரண்ட சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 294 பேர் உயிரிழந்த நிலையில் 900க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் பலர் கவலைக்கிடமாக உள்ள நிலையில் பலரும் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியுள்ளனர். எங்கு பார்த்தாலும் பிணங்கள், அழுகுரல் என்று ஒடிசா ரயில் விபத்தின் கோர காட்சிகள் நமது மனதில் ஆறாத வடுவாக மாறியுள்ளன.

அந்த வரிசையில் அங்கு தண்டவாளத்தில் காதல் கடிதங்கள் பல கண்டு பிடிக்கப்பட்டன. அதில் கைகளால் ஓவியம் வரைந்தும், வண்ணங்களால் எழுதியும் காதலர்கள் தங்கள் காதலை பரிமாறியுள்ளனர். ஆனால் அவர்கள் இருவரும் தற்போது எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இதுதான் காலத்தின் கோலம்.