
அமெரிக்காவில் நவம்பர் 5ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் அதிபர் ஜோபைடன் விலகிய நிலையில் கமலஹாரிஸ் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். இந்நிலையில் ரஷ்யா மற்றும் அமெரிக்காவுக்கு இடையே பிரச்சனைகள் இருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால் தற்போது எதிர்பாராத ட்விஸ்டாக அமெரிக்க அதிபர் புதின் அதிபர் தேர்தலில் கமலாஹாரிசுக்கு ஆதரவு கொடுப்பதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக ரஷ்ய அதிபர் புதின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், எங்களுடைய முழு ஆதரவு எப்போதும் அதிபர் ஜோ பைடனுக்கு தான். ஆனால் தற்போது அவர் தேர்தலில் போட்டியிடாததால் கமலா ஹாரிசுக்கு முழு ஆதரவு வழங்குகிறோம். மேலும் ரஷ்யா போன்ற ஒரு சக்தி வாய்ந்த நாடு தற்போது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸுக்கு அதிபர் தேர்தலில் ஆதரவு வழங்குவதாக அறிவித்தது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.