பதினெட்டாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஆனது நேற்று தொடங்கி 25ஆம் தேதி வரை இந்தியாவின் தலைநகரங்களில் நடைபெற உள்ளது. கொல்கத்தா ஈடர்ன் கார்டன் மைதானத்தில் நேற்று நடப்புச் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி உடன் மோதியது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற்றது. இதற்கிடையில் இந்த ஐபிஎல் சீசனுக்கு வர்ணனையாளர்கள் பட்டியலானது நேற்று முன் தினம் வெளியானது. இதில் எப்போதும் இடம் பெற்று வந்த இந்திய அணியின் முன்னாள் வர்ணனையாளர் இர்பான் பதான் பெயரானது விடுபட்டது.

கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்ற பிறகு வர்ணனையாளராக இருந்து வரும் இர்ஃபான் பதான் சமீபம காலமாகவே குறிப்பிட்ட சில பேரை குறி வைக்கும் விதமாக அவர்களை விமர்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதுபோன்று வர்ணனையில் போது குறிப்பிட்ட வீரர்களை விமர்சித்து வருவதாகவும் சில வீரர்கள் புகார் அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தான் ஐபிஎல் தொடரில் வர்ணணையாளர்கள் பட்டியலில் இருந்து இவருடைய பெயர் நீக்கப்பட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.