
அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் திமுக அரசினை கடுமையாக விமர்சித்தார். இது குறித்து அவர் கூறியதாவது, தமிழகத்தில் தொடங்கப்படும் அனைத்து திட்டங்களுக்கும் கலைஞர் பெயரை மட்டும் தான் வைக்க வேண்டுமா.? என்று கேள்வி எழுப்பினார்.
அதன் பிறகு தமிழகத்தில் கார் ரேஸ் நடத்தப்பட்ட நிலையில் அதில் வந்த வருமானத்தை ஊராட்சி மற்றும் நகராட்சி வளர்ச்சிக்கு சிறப்பு நிதியாக கொடுத்திருக்கலாம். அதன்பிறகு தமிழகத்தில் சொத்து வரி மற்றும் பால் விலை போன்றவைகள் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. அதுபோக மின்சார கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் விலை உயர்வும் மற்றும் முதல்வர் ஸ்டாலின் தன் மகனுக்கு பட்டாபிஷேகம் செய்தது போன்றவைகள் தான் திமுக அரசின் சாதனைகள் என்று கூறினார்.