கடந்த 2019 -ம் ஆண்டு Man Vs Wild எனும் சாகச பயணத்தை சாகசப் பயணி பியர் கிரில்ஸ் உடன் பிரதமர்  நரேந்திர மோடி மேற்கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவின் ஒரு கிளிப்பை பகிர்ந்து இந்த நிகழ்வு நம் அனைவரையும் சிரிக்கவைக்கிறது என கூறியுள்ளார். அந்த வீடியோவில் யானையின் காய்ந்த சாணத்தை எடுத்து பியர் கிரில்ஸ் நுகர்ந்து பார்க்கிறார்.

பின்னர் அதனை மோடியை நுகர்ந்து பார்க்கச்சொல்லிக்கிறார். அப்போது இது போன்றுதான் ஆப்ரிக்காவில் யானை புதிதாக போட்ட சாணத்தை பிழிந்து அதிலிருந்து நீர் குடித்தேன் என அவர் கூறுகிறார். அதனை கேட்ட மோடி வாய் விட்டு சிரிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.