அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன்  நடிப்பில் வெளியான திரைப்படம் டிராகன.  இந்த படம் இந்த காலகட்ட இளைஞர்களுக்கு ஏற்றபடி இருந்ததால் இந்த படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்கப்பட்டது. இதுவரை 150 கோடிக்கு  படம் வசூல் செய்துள்ளது.  இந்த படம் குறித்து பலரும் பாராட்டி வந்த நிலையில் ரஜினிகாந்த் டிராகன் பட குழுவினரை வீட்டுக்கே அழைத்து பாராட்டினார். இந்த நிலையில் டிராகன் பட குழுவினர் விஜய்யை சந்தித்து வாழ்த்து பெற்றார்கள். இது குறித்து அஸ்வத் மாரிமுத்து தன்னுடைய எக்ஸ் பதிவில், என்னை சார்ந்தவர்களுக்கு தெரியும் நடிகர் விஜய்யை ஒரு நாள் முழு தகுதியுடன் சந்திக்கவும் அவரோடு பணியாற்றமும் எவ்வளவு கடுமையாக உழைத்து வருகிறேன் என்று .

அவருடைய மிகப்பெரிய ரசிகன் என்று என் குழுவிற்கு  தெரியும். நான் என்ன பேசப் போகிறேன் என்று என்னை ஆச்சரியமாக பார்த்தார்கள். அவர் என்னை பார்த்தார் அப்போது கண்ணீர் மட்டுமே வந்தது. அனைவருக்கும் ஆச்சரியம் ஏன் அவர் மீது இவ்வளவு அன்பு என்று.  அவர் கூறிய அருமையாக எழுதியிருக்கிறீர்கள் சகோதரரே என்ற வார்த்தையில் என்னுடைய வட்டம் நிறைந்து விட்டது. இது போதும் எனக்கு” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.