பெரும்பாலும் பேருந்துகளில் பயணம் செய்வதை விட மக்கள் ரயில்களில் பயணம் செய்வதையே விரும்புகிறார்கள். ரயில் டிக்கெட் குறைவாகவும், பயணம் சவுகரியமாகவும் இருப்பதால் இதை தேர்வு செய்கிறார்கள். இந்நிலையில் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து மூலம் நவம்பர் மாதத்தில் அதிகளவில் வருவாய் ஈட்டியுள்ளதாக தெற்கு மத்திய ரயில்வே சனிக்கிழமை அறிவித்துள்ளது.

கடந்த மாதம் பயணிகளிடம் இருந்து ரூ.469.40 கோடியும், 11.57 மில்லியன் டன் சரக்குகள் மூலம் ரூ.1,131.13 கோடியும் பெறப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மண்டல சிபிஆர்ஓ சிஎச் ராகேஷ் கூறுகையில், நவம்பர் மாதத்தில் இதுபோன்ற அதிக அளவு வருவாய் இதற்கு முந்தைய எந்த நிதியாண்டிலும் பெறப்படவில்லை என்று தெரிவித்தார்.