ஆதார் என்பது மிக முக்கியமான தனித்துவமான ஆவணம் .கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் அரசு வழங்கும் சலுகைகளை பெறுவதற்கு ஆதார் மிகவும் அவசியம். இந்த ஆதாரை 10 வருடங்களுக்கு ஒரு முறை அப்டேட் செய்ய வேண்டும் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கூறி வருகிறது. இந்த நிலையில் ஆதாரை அப்டேட் செய்வது குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகி  உள்ளது. அதாவது மக்கள் பெரும்பாலும் ஆதார்  அட்டையை வங்கி கணக்கு, ரேஷன் கார்டு ஆகியவற்றோடு இணைத்து இருப்பார்கள். இவ்வாறு இணைக்கப்பட்டுள்ள ஒரு நபரின் ஆதார் இயங்குகிறதா? அவர் பயன்படுத்துகிறாரா? என்பதை UDAI  அமைப்பு அறிந்து கொள்வதற்கு ஆதார் புதுப்பித்தல் அவசியம்.

புதுப்பித்துகொள்ள அருகிலுள்ள இ சேவை மையம் தாலுகா அலுவலகத்தில் உள்ள நிரந்தர ஆதார் பதிவு மையம் மூலமாக புதுப்பித்துக் கொள்ளலாம். இதனை தொடர்ந்து ஆதார் புதுப்பிக்க வேண்டிய அவசியத்தை பொதுமக்களுக்கு உணர்த்துவதற்காக டிசம்பர் 12-ம் தேதி வரை இணையதளம் மூலமாகவும் இலவசமாக ஆதார் புதுப்பிக்கலாம் என்று அரசு தெரிவித்துள்ளது. வங்கி புத்தகம், வாக்காளர் அட்டை பான் கார்டு, ரேஷன் கார்டு போன்ற ஆவணங்கள் பயன்படுத்தியும் புதுப்பித்துக் கொள்ளலாம்.