
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு சிறப்பாக நடைபெற்று முடிந்தது. மாநாட்டில் விஜய் அவர்கள் பேசிய அரசியல் பேச்சு அவருடைய ரசிகர்கள், தொண்டர்கள் மட்டுமல்லாமல் பலரையும் கவர்ந்துள்ளது. குறிப்பாக விஜய் அவர்கள் ரசிகர்களுக்கும், அஜித் அவர்களின் ரசிகர்களுக்கும் சுத்தமாக சமூக வலைதளங்களில் ஆகாது. சினிமாவில் இருவரும் எதிரெதிர் போட்டிகள் என்பதால் அவர்களது ரசிகர்களும் சண்டையிட்டு கொள்வது அவ்வப்போது வழக்கம்.
ஆனால் இந்த அரசியல் மாநாட்டை பொருத்தவரையில், அஜித் ரசிகர்களும், விஜய் அவர்களுக்கு அரசியல் பயணத்தில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அஜித் அவர்களின் ஏகன் படத்தில் இடம்பெறக்கூடிய பாடல் ஒன்றை விஜய் அவர்களின் மாநாட்டு காட்சிகளை வைத்து பின்னணி இசையாக அதை எடிட் செய்து இணையத்தில் வெளியிட அது தற்போது வைரலாகி வருகிறது. அதில் கனவுக்கில்லை எல்லை, இங்கு கட்டுப்பாடு இல்லை, இது அண்ணனுடைய கூட்டம், நாங்க போடப்போற ஆட்டம் என்ற பாடல் வரிகள் இடம் பெற்றுள்ளன.
There’s no going back
pic.twitter.com/7nbmFEh3Nk
— saaru
(@saaruhhhhhhhh) October 27, 2024