இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி தயாரிப்பில் அறிமுக இயக்குனர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவான திரைப்படம் பேட் கேர்ள். நடிகை அஞ்சலி, ரம்யா உள்ளிட்டவர்கள் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். இந்த படத்தின் டீசர் வெளியானதிலிருந்து இப்படம் பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. இந்த நிலையில் இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் பிரபல இயக்குனர் ஆர்கே செல்வமணி இந்த படத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.

அதாவது, “குக்கரில் சாதம் பொங்கும் பொழுது ஓரிரு அரசி வெளியே வரும். அதற்குள் சாதம் வேக வில்லை என்று முடிவு பண்ண முடியுமா?  ஒரு படத்தை முழுமையாக பார்க்காமல் அது சரியா? தவறா? என்று கருத்து கூறுவது அரைவேக்காட்டுத்தனம்” என்று கூறியுள்ளார்.