
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலிப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது மாமன்னன், சைரன், ரிவால்வர் ரீட்டா, ரகு தாத்தா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அதன் பிறகு நடிகை கீர்த்தி தெலுங்கில் நாணியுடன் இணைந்து தசரா என்ற படத்தில் நடித்துள்ள நிலையில் இந்த படத்தின் சூட்டிங் அண்மையில் நிறைவடைந்தது.

இந்நிலையில் படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தை நெருங்கிய நிலையில் இறுதி கட்ட படப்பிடிப்பில் பணியாற்றிய 130 பேருக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் தலா 2 கிராம் மதிப்பிலான தங்க காசை பரிசாக கொடுத்துள்ளார். மேலும் இது தொடர்பான செய்தி இணையதளத்தில் தீயாக பரவி வரும் நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.