2014 ஆம் ஆண்டு ஒன்றிய அளவில் ஆட்சிக்கு வந்த பாஜக நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு கொடுத்த எந்த வாக்குறுதியையும் இதுவரை நிறைவேற்றவில்லை. வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லையே என்ற கூச்சமும் பாஜகவுக்கு இல்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு கூறியுள்ளார். மக்களுக்கு பாஜக கொடுத்ததெல்லாம் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு, இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்துள்ளது. மேலும் அயோத்தி ராமர் கோவில் திறப்பு ஆன்மீக விழா அல்ல அரசியல் விழா எனவும் டி ஆர் பாலு விமர்சித்துள்ளார்.