
ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் குரோசூரில் உள்ள குளத்தில் முக்காந்தி என்பவர் மீன் பிடித்து கொண்டிருந்தார். அப்போது வித்தியாசமான நிற அமைப்புடன் ஒரு மீன் அவரது வலையில் சிக்கியது.
கருப்பு நிறக் கோடுகளுடன் அடர் பச்சை நிறத்தில் இருந்த அந்த மீனின் உடல் முழுவதும் முட்கள் இருந்துள்ளது. உள்ளூர் மீனவர்கள் அதை சக்கர் மீன் என்றும், ஒரு சில பகுதிகளில் அதை பிசாசுமீன் என்றும் அழைக்கின்றனர்.
இந்த மீன்கள் பொதுவாக கடலின் அடிப்பகுதியில் வாழக்கூடியது. இவை ஆறுகள் வழியாக குளங்களை அடைவதாக கூறப்படுகிறது. இந்த வகை மீன்களை சாப்பிடுவதில்லை என மீனவர்கள் கூறியுள்ளனர்.