இங்கிலாந்து நாட்டின் பிரிட்டனில் சிட்டி ஆஃப் போர்ட்ஸ்மவுத் கல்லூரியில் ரொனால்டோ என்று பெயரிடப்பட்ட போவா கன்ஸ்ட்ரிக்டர் வகை பாம்பு உள்ளது. இந்த பாம்பானது ஆண் பாம்புடன்  சேராமல் 14 குட்டிகளை ஈன்றெடுத்துள்ளது. முதலில் இது ஆண் பாம்பு என கருதப்பட்டது. ஆனால் தற்போது இது 14 குட்டிகளை ஈன்றது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பேசிய விலங்குகள் பராமரிப்பு நிபுணர், கடந்த 9 வருடங்களாகவே எந்த ஒரு ஆண் பாம்போடும் இந்த ரொனால்டோ பாம்பு இணையவில்லை. இணையே சேராமல் குட்டியை ஈன்றெடுக்கும் இதுபோன்ற நிகழ்வு பார்தெனோஜெனிசீஸ் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு முன்பாக பூச்சி, முதலை, திருக்கை மீன், முதலை ஆகியவை ஆண் துணையில்லாமல் கருத்தரித்துள்ளன என்று கூறியுள்ளார்.