கடந்த 2022 ஆம் வருடம் அக்டோபர் மாதம் கல்லூரி செல்வதற்காக ரயில் நிலையத்தில் காத்திருந்த சத்யபிரியா என்ற பெண் ரயில் முன் தள்ளி விடப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதில் சதிஷ் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் ஒருதலை காதலால் இந்த கொலை நடந்ததாக கூறப்பட்டது.

சிபிசிஐடி கையாண்ட இந்த வழக்கை சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த வழக்கு தொடர்பான வாதங்கள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் வருகின்ற ஜனவரி மாதம் 27ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.