ஒவ்வொருவரும் செய்யும் செயலுக்கு ஏற்ப பலனை அனுபவிப்பார்கள் என்று கூறுவது உண்டு. அது கெட்ட செயலாக இருந்தால் அவர்களுக்கான பலன் கிடைத்தே தீரும். இதனை சிலர் கர்மா என்று கூறுவார்கள். அப்படி ஒரு நபருக்கு அவர் செய்த செயலுக்கான தண்டனை உடனே கிடைத்துள்ளது. இது தொடர்பான காணொளியை “Instant Karma” என்று நெட்டிசன்ககள் வைரல் ஆக்கி வருகின்றனர்.

அதாவது அந்த காணொளியில் ஒரு நபர் மரத்தை வேகமாக மிதிக்கிறார். இதனால் மாறன் உடைந்து விழும் என்று அவர் எதிர்பார்த்தார். அவர் நினைத்தபடி மரம் ஒடிந்து விழுந்தது. ஆனால் ஒடிந்த மரத்தின் பாகம் எதிர் திசையில் விழாமல் எட்டி உதைத்தவரின் தலையிலேயே விழுந்தது. இதனை தான் தற்போது “உடனடி கர்மா” என்று வைரல் ஆக்கி வருகின்றனர்.