நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய், மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ராகுல் காந்திக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவருடைய  எக்ஸ் தள பக்கத்தில், மக்களுக்கு தேவையானதாய் செய்ய ராகுல் காந்திக்கு வாழ்த்துக்கள் என்று பதிவிட்டு இருந்தார்.

இந்த நிலையில் இதற்கு ராகுல் காந்தி நன்றி தெரிவித்தார். இதுகுறித்து ராகுல் காந்தி தன்னுடைய எக்ஸ் தளத்தில், ஒவ்வொரு இந்தியனின் குரலும் கேட்கப்படும் பொழுது நம்முடைய ஜனநாயகம் வலுவடைகிறது. இது நம்முடைய கூட்டு இலக்கு மற்றும் கடமையாக இரண்டும் ஆகும் என்று விஜய்க்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.