
இந்திய சினிமாவின் பிரபல இயக்குனரான பிரசாந்த் நீல் தெலுங்கு மற்றும் கன்னடம் திரைப்படங்களையும் இயக்கிவருகிறார். இவர் 2014ம் ஆண்டு கன்னடத் திரைப்படமான உக்ரம் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு இவர் கேஜிஎப் திரைப்படத்தை இயக்கியதின் மூலம் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானார். இந்த படமானது உலகளவில் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்தது.
அதோடு கன்னட சினிமாவிலும் அதிக வசூல் சாதனை பெற்ற திரைப்படம் என்ற பெருமையையும் கேஜிஎப் பெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது பிரசாந்த் நீல் நடிகர் அஜித் குமாரை வைத்து 2 படத்தை தயாரிக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் ஒரு படமானது கேஜிஎப் போன்ற படமாக அமையும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் அஜித்குமார் நடித்து வரும் குட் பேட் அக்லி ஷூட்டிங் முடிந்த பின்பு இந்த படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் இந்த படம் 2025ம் ஆண்டு திரையரங்கில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.