
நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும் ஆர்சிபி வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. முதல் போட்டியில் கொல்கத்தாவை சொந்த மைதானத்திலே வீழ்த்தியது. இரண்டாவது போட்டியில் சென்னையையும் அதன் சொந்த மைதானத்திலேயே வீழ்த்தியது. பெங்களூர் அணி தான் நடப்பு IPL-இல் விளையாடுவதற்கு அதிக தூரம் பயணிக்கும் அணி. IPL போட்டிகளில் மொத்தம் 42 மணி நேரம் விளையாடும் நிலையில் அந்த அணி வீரர்கள் மொத்தம் 17048 கிலோமீட்டர் தூரம் பயணித்து விமானத்தில் வருகிறார்கள்.
ஒரு போட்டி பெங்களூருவில், அடுத்த போட்டி வெளியூரில் என பெங்களூரு அணி விளையாடும் போட்டிகளின் அட்டவணை அமைக்கப்பட்டது. இதனால் RCB அணி தான் அதிகம் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து பேசிய ஏபி டி வில்லியர்ஸ், “ஆர்சிபி அணி ஐபிஎல் தொடரை சிறப்பாக தொடங்கி இருக்கிறது. அந்த அணியின் போட்டி அட்டவணையை பாருங்கள். ஒரு போட்டி பெங்களூரில்.. அடுத்த போட்டி வெளியூரில்.. மறுபடியும் பெங்களூரில்.. அடுத்த போட்டி வெளியூரில்.. இப்படி பைத்தியக்காரத்தனமாக உள்ளது. இது போன்ற சவாலான சூழ்நிலையை நான் பார்த்ததில்லை. ஆனால் அது அவர்களின் பலமாகவும் இருக்கலாம்” என்று கூறியுள்ளார்.