2024 ஆம் ஆண்டு ஐ பி எல் தொடர் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் சிஎஸ்கே அணி வெளியேறியது ரசிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது. அதேசமயம் தோனி தனது ஓய்வு குறித்து அறிவிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ள நிலையில் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் உடலை உறுதியாக வைத்துக் கொள்வதற்கு தொடர்ந்து கடினமான உழைப்பை தவிர தான் வேறு எதையும் செய்வதில்லை என்று தோனி தெரிவித்துள்ளார். துபாய் ஐ 103.8 என்ற youtube சேனலில் பேசிய அவர், தொழில்முறை கிரிக்கெட்டராக இருப்பது எளிதான காரியம் அல்ல. உங்களது வயதினை யாரும் குறைக்க மாட்டார்கள். நீங்கள் அணியில் விளையாட வேண்டும் என்றால் மற்ற வீரர்களைப் போல் உடல் உறுதியுடன் இருந்தாக வேண்டும் என தெரிவித்துள்ளார்.