
தமிழ்நாட்டில் 69 சதவீதம் இட ஒதுக்கீடு இருப்பதற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி தான் காரணம் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் அண்மையில் ஒரு பேட்டியில் கூறி இருந்தார். இது குறித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வரலாற்றை திரித்து கூறுவதை பிரகாஷ் ராஜ் இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். இட ஒதுக்கீட்டிற்கு காரணம் கருணாநிதி என்று அவர் கூறுவது நகைப்பை ஏற்படுத்துகின்றது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சீரிய முயற்சியால் மட்டுமே 69 சதவீதம் இட ஒதுக்கீடு பாதுகாக்கப்பட்டது என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.