மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று ஹைதராபாத் மற்றும் மும்பை அணிகள் மோதிய போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்த நிலையில் அபிஷேக் ஷர்மா அதிகபட்சமாக 40 ரன்கள் வரை எடுத்திருந்தார். இதைத்தொடர்ந்து களம் இறங்கிய மும்பை அணி 18.1 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் போது மும்பை அணியின் வீரர் ரோகித் சர்மா ஒரு புதிய சாதனை படைத்துள்ளார். அதாவது மும்பை வான்கடே மைதானத்தில் ஐபிஎல் போட்டியில் முதல் 100 சிக்ஸர்களை விளாசிய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும் 85 சித்தர்களுடன் பெல்லார்ட் இரண்டாம் இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.