கரூரில் சாலையின் நடுவே ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமப்பட்டனர்.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மங்கம்மாள் சாலையில் பழைய நீதிமன்றம் அமைந்துள்ளது. அதன் காரணமாக இந்த சாலையில் ஏராளமான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கனமழை காரணமாக சாலையின் திடீரென பள்ளம் ஏற்பட்டது.

சுமார் 10 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளதால் கிராமங்களுக்கு செல்லும் சாலைகள் துண்டிக்கப்பட்டது. இந்த பகுதியில் மூன்றாவது முறையாக இதே போல் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் அதிருப்தி அடைந்த மக்கள் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.