சிக்கிம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அதாவது கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் அதை சரி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் காங்டாக்கின் டிக்சு-சங்க்லாங் சாலையிலும் மழையினால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் இந்திய ராணுவத்தினர் சுமார் 70 அடி நீளத்திற்கு பெய்லி பாலம் ஒன்றினை கட்டியுள்ளனர். கட்டுமான பணிகள் கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி தொடங்கியது. இதைத் தொடர்ந்து 72 மணி நேரத்தில் இந்த பணிகளை இந்திய ராணுவத்தினர் முடித்துள்ளனர். மேலும் அவர்களின் செயலுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.