
அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். இவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்தில் காமெடி தர்பார் நடந்து கொண்டிருப்பதாக திமுக ஆட்சியை விமர்சித்தார். அதாவது நடிகர் சிவாஜி கணேசனின் 97-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அடையாறில் உள்ள சிவாஜி மணிமண்டபத்தில் ஜெயக்குமார் மரியாதை செலுத்தினார்.
அதன் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தற்போது மழைக்காலம் ஆரம்பித்துவிட்டது. இப்போது வந்து மழைநீர் வடிகால் பணிகள் நடக்கிறது. தமிழ்நாட்டில் காமெடி தர்பார் நடந்து கொண்டிருக்கிறது. மேலும் இது ஒரு 23ஆம் புலிகேசி அரசு என்று கிண்டலடித்தார்.