
நடிகர் ரஜினியின் “ஜெயிலர்” திரைப்படம் நேற்று முன்தினம் வெளியானது. இந்நிலையில் படம் வெளியான முதல் நாளிலேயே உலகம் முழுவதும் வசூலை வாரி குவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் 529.46 கோடி வசூல் செய்த நிலையில், இந்தியா முழுவதும் ரூ.55 கோடியும், உலகம் முழுவதும் ரூ.96 கோடியும் வசூல் ஈட்டியுள்ளது. தமிழ் படம் ஒன்று முதல் நாளில் அதிக வசூலை ஈட்டிய முதல் திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. தொடர் விடுமுறை வருவதால் விரைவில் ரூ.200 கோடியை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கலவையான விமர்சனம் வந்துகொண்டிருக்கும் நிலையில் தற்போது படத்தினை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் சென்னையிலுள்ள ஒரு தியேட்டருக்கு படம் பார்க்க வந்த ரசிகர் ஒருவர் , “ ரஜினி ஒழிக.. விஜய் வாழ்க..” என ஆக்கிரோஷமாக கத்தியுள்ளார். இதனை கவனித்த ரஜினிகாந்த் ரசிகர்கள் அவரை பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளார்கள். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த இணையவாசிகள், “இது எல்லா தேவையா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
Pavatha Polanthutanuka 😂pic.twitter.com/rJfzWuVzu1
— 🚬 (@_Dev_Tweets) August 10, 2023