இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் வெளியாகும் சில பதிவுகள் வைரலாகி பல்வேறு கருத்துக்களை பெரும். அப்படி ரெடிட் தளத்தில் பகிரப்பட்ட ஒரு பதிவு நெட்டிசன்கள் மத்தியில் பேசு பொருளாகியுள்ளது. ஒரு ஊழியர் அலுவலகத்தில் இருந்து 5 மணிக்கு புறப்பட வேண்டும் என்ற விதிமுறையை மீறி 4:59 , 4:58 மணிக்கு அலுவலகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இதனை தொடர்ந்து கண்காணித்த மேலதிகாரி ஊழியருக்கு சரியான நேரத்திற்கு வேலையில் இருந்து புறப்பட வேண்டும் என்றும் இதனை பழக்கமாக வைத்திருக்க வேண்டாம் என்றும் எச்சரித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஒரு நிமிடத்திற்கு நோட்டீஸ் வழங்கிய ரெடிட் பதிவு தற்போது சமூக வலைதளத்தில் பேசு பொருளாகியுள்ளது.