
சென்னை சேப்பாக்கத்தில் நேற்று முன்தினம் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. போட்டிக்கான டிக்கெட் ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது டிக்கெட்டை அதிக விலைக்கு விற்பனை செய்த 25 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 48 டிக்கெட்டுகளும், 52 ஆயிரம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.