உலகின் மூலை முடுக்கெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒரு விசித்திரமான சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. ஒவ்வொருவரும் தங்களுடைய திறமையை காட்டுவதற்கு ஏதாவது ஒன்றை செய்து வீடியோவாக பதிவிட்டு வருகின்றனர். சில நேரங்களில் இவர்களின் சாகசம் டிரெண்ட் ஆகி வருகிறது. அப்படி இல்லை என்றால் அவர்களுக்கே அது ஆபத்தா முடிகிறது. இந்நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகு வருகிறது.

அதாவது கடற்கரையில் அதிபயங்கரமான சூறாவளி ஒன்று சுழன்று அடித்துக் கொண்டிருக்கிறது. மணல்கள் வான் பறந்து சுழன்று கொண்டிருக்கிறது. அப்போது ராணுவ வீரர் ஒருவர் சூறாவளியை தொட்டு விட்டு விரைந்து ஓடுகிறார். இது குறித்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதை பார்த்த இணையவாசிகள் வியப்பில் மூழ்கியும் சிலர் இதுபோன்ற காரியங்களில் யாரும் இறங்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

https://twitter.com/i/status/1651662969431019522