
மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் சூரிய ஒளி மின்சக்தி திட்டத்தை தமிழக மின்வாரியம் நடைமுறைப்படுத்தி வருகின்றது. இந்த திட்டத்தின் கீழ் வீட்டு மேற்கூரைகளில் சூரிய ஒளி மின் தகடு அமைப்பதற்கு 3000 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. சராசரியாக 400 முதல் 600 யூனிட் வரை பயன்படுத்தும் நுகர்வோர் சூரிய ஒளி மேற்கூரை மின்சக்தி ஒரு கிலோ வாட் மின்சார உபகரணத்தை நிறுவும்போது மின் கட்டணத்தை எளிதில் குறைக்கலாம்.
தற்போது 400 யூனிட்டுக்கு மின்வாரியத்துக்கு 1125 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்றால் வீடுகளில் சூரிய மின்தகடு பொருத்திய பிறகு நீங்கள் 206 ரூபாய் கட்டணம் செலுத்தினால் போதும். இதன் மூலமாக 919 ரூபாய் பணத்தை நீங்கள் சேமிக்கலாம். இந்த திட்டத்தில் இணைய www.pmsuryaghar.gov.in, www.solorrooftop.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய 9445854568, 9445854477, 9445854481 ஆகிய எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.