போலி மதவாத பேர் வழிகள் தங்களுடைய குதர்க்க சிந்தனை மூலம் தமிழ்நாட்டை நாசம் செய்ய முயற்சிப்பதாக செல்வ பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், பன்முகத் தன்மை கொண்டு அமைதியாக வாழ்ந்து தமிழக மக்களை போலி மதவாத பேர் வழிகள் தங்களுடைய குதர்க்க சிந்தனை மூலமாக நாசம் செய்ய முயற்சிக்கின்றனர். திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக காலம் காலமாக மாமன் மச்சான் என்ற உறவு முறை மூலம் பழகிக் கொண்டிருக்கும் மக்கள் மத்தியில் வீண் பழிகள் மற்றும் வதந்திகள் மூலம் தமிழ் நிலப்பரப்பை நாசம் செய்வதற்கு ஆர் எஸ் எஸ், பாஜக மற்றும் இந்து முன்னணி போன்ற சில அமைப்புகள் முயற்சி செய்கின்றன.

உண்மையான கடவுள் நம்பிக்கையும் ஆன்மீக உள்ளமும் கொண்டு ஆளும் அரசு அனைத்து செயல்களையும் மக்கள் பாராட்ட சிறப்பாக செய்து வருகின்றது. ஆனால் பாஜகவுக்கு அதில் துளியும் நம்பிக்கை இல்லை. கடவுள் மற்றும் ஆன்மீகம் என்பதை விட அவதூறுகள் மற்றும் வதந்திகள் ஆகியவற்றை மட்டுமே நம்பி கட்சி நடத்துபவர்களாக உள்ளனர். வடநாட்டில் நிலவுவது போல மக்கள் மத்தியில் குழப்பத்தை உண்டாக்கி கலகம் விளைவிக்க பார்க்கிறார்கள். அமைதியை குலைக்கக்கூடிய எவராக இருந்தாலும் மக்களால் அந்நியப்படுத்தப்படுவார்கள் என்பதை மதவாத சக்திகள் உணர்ந்து செயல்பட வேண்டும் என்று செல்வப் பெருந்தகை கூறியுள்ளார்.