பொதுமக்களை தவறாக வழிநடத்தக்கூடிய வகையிலான வழக்கத்துக்கு மாறான பெரிய பெயர் பலகைகள் விசிட்டிங் கார்டுகளை பயன்படுத்தக்கூடாது என்று NMC  அறிவுறுத்தி உள்ளது. மருத்துவர்களின் பெயர் பலகையில் கல்வி தகுதி, தலைப்பு, சிறப்பு தகுதி  அல்லது மருத்துவர் பதிவு எண் உள்ளிட்ட விவரங்கள் தவிர மற்ற விஷயங்கள் இடம்பெற கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், பெரிய பெயர் பலகைகள், விசிட்டிங் கார்டுகளை மருத்துவர்கள் பயன்படுத்தக்கூடாது என  அறிவுறுத்தியுள்ளது. மேலும், பெயர் பலகையில் மருத்துவரின் பெயர், கல்வித் தகுதி, சிறப்புத் தகுதி மற்றும் மருத்துவரின் பதிவு எண் தவிர வேற ஏதும் இடம்பெற்றிருக்க கூடாது. சிறப்பு மருத்துவர் (ஸ்பெஷலிஸ்ட்) என்ற தலைப்பை அதற்கான சிறப்பு கல்வி பயின்றவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளது.