தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று கோவையில் உள்ள அரசு கல்லூரியில் நடைபெற்ற விழாவில் தமிழ் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்தார். இது தொடர்பாக தற்போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தற்போது தன் கருத்தினை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் பேசியதாவது, நாம் தமிழர் கட்சிக்கு இளைஞர்கள் வாக்களிக்கிறார்கள். இதனை தடுப்பதற்காகவே திமுக அரசு தமிழ் புதல்வன் திட்டத்தை தொடங்கியுள்ளது. திராவிட கட்சிகள் காசு கொடுக்காமல் கூட்டத்தைக் கூட்டினால் நான் கட்சியை கலைத்து விட்டு செல்ல தயாராக இருக்கிறேன்.

நாம் தமிழர் கட்சி பாஜகவின் பி டீம் கிடையாது. மேலும் திமுகவின் மெயின் பி டீமே பாஜகதான் என்று கூறினார். மேலும் சீமான் கட்சியை கலைக்க தயாராக இருக்கிறேன் என்று அறிவித்தது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளதோடு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.