வேலை செய்யும் பெண்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிவேகமாக அதிகரித்து வருகிறது. அதேசமயம் பல காரணங்களால் வேலையை விட்டு பெண்கள் வெளியேறி வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக பணியாற்றும் பெண்களில் சுமார் 34 சதவீதம் பேர் வேலையை விட்டு வெளியேறுவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பெண்கள் இந்த நிலையில் வேலையை விட்டு வெளியேறுவதற்கு காரணமாக அவர்களால் தனிப்பட்ட மற்றும் தொழில் சார்ந்த பொறுப்புக்களை சமன் செய்ய முடியாமல் இருப்பது தான் எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.