மொராக்கோவின் காசாபிளங்காவில் இருந்து மொண்ட்ரீயாலுக்கு புறப்பட தயாராக இருந்த ஏர் கனடா விமானம் திடீரென புறப்படும் நேரம் தள்ளி வைக்கப்பட்டது. விமானத்தில் இருந்த ஒரு பயணிக்கும் விமான பணிப்பெண்ணுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளது.

விமானத்தில் ஏர் கண்டிஷனிங் அதிகமாக இருந்ததால் பெண் பயணி ஒருவர் போர்வை கேட்டுள்ளார். இது தொடர்பாக அந்த பணி பெண்ணுக்கும் -பயணிக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடந்துள்ளது. பணிப்பெண்- பெண் பயணியிடம் இந்த சாதாரண விஷயத்திற்காக கடுமையாக நடந்து கொடுள்ளார் . மேலும் விமான பணிப்பெண் ஆத்திரமடைந்து பயணியை கத்தி வசைபாடி அனுப்பியதோடு, போலீசாருக்கு தகவல் கொடுத்து அவரை விமானத்தில் இருந்து இறக்கிவிடக் கோரியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக விமான நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. சம்பவம் தொடர்பாக ஏர் கனடா நிர்வாகம் மன்னிப்பு கோரியுள்ளது மேலும் பயணிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்றும், விமான பணிப்பெண்ணின் நடவடிக்கை குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

“>