
ஹைதராபாத்தின் பாபா நகரில் ஏற்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவத்தில், 62 வயதான சாகிர் கான் என்ற மருந்துக் கடை உரிமையாளர், சிறிய தகராறை தொடர்ந்து சில இளைஞர்களால் அடித்துக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் மார்ச் 12 நள்ளிரவில் நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அவரது கடையின் முன்பு பான் கடை வாடிக்கையாளர்கள் அமர்ந்திருப்பதை அவர் எதிர்த்து, அவர்களை அங்கிருந்து செல்லுமாறு கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த பான் கடை உரிமையாளரும், அவரது நண்பர்களும் கானின் மீது முரட்டுத் தனமாக தாக்குதல் நடத்தினர்.கடந்த 2016 ஆம் ஆண்டு அறுவை சிகிச்சை செய்திருந்த கான், அந்த தாக்குதலைத் தாங்க முடியாமல் அங்கு சரிந்து விழுந்து உயிரிழந்தார்.
இந்த சம்பவம் அங்குள்ள CCTV கேமராவில் பதிவாக, காவல்துறைக்கு முக்கிய ஆதாரமாக உள்ளது. சாகிர் கானின் இரண்டு மகன்களும் தாக்குதலில் சிக்கியுள்ளனர், ஆனால் அவர்கள் உயிர் பிழைத்துள்ளனர். இந்த சம்பவத்துக்குப் பிறகு, காஞ்சன்பாக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தப்பியோடிய குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த சம்பவம், சிறிய தகராறுகள் கூட எவ்வளவு பெரிய பேரழிவாக மாறலாம் என்பதற்கான நிகழ்வு என சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
An elderly man was beaten to death by a group of youngsters allegedly over an argument about a small matter at Baba Nagar in #Kanchanbagh police station limits on Wednesday midnight, caught in #CCTV
According to police , Zakir Khan(62), who runs a grocery store at… pic.twitter.com/KXkO0C7RpS
— Surya Reddy (@jsuryareddy) March 13, 2025