
கோயம்புத்தூரில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சௌந்தர்யா (32) என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கோவை மாவட்டம் உடையாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர். இவர் அதே பள்ளியில் படிக்கும் 13 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அந்த ஆசிரியை பலமுறை மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த நிலையில் அந்த கொடூர சம்பவம் தற்போது தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அந்த மாணவி 9-ம் வகுப்பு படித்துவரும் நிலையில் ஆசிரியையால் சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளாகியுள்ளார். மேலும் இது குறித்த தகவலின் பெயரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து போக்ஸோ சட்டத்தின் கீழ் சௌந்தர்யாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.