உலகப் புகழ்பெற்ற யுனெஸ்கோவின் “Memory of the World” உலக நினைவகப் பட்டியலில், இந்தியாவின் பாரம்பரியமான ஸ்ரீமத் பகவத் கீதை மற்றும் பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரம் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த பட்டியலில் ஜெனீவா ஒப்பந்தங்கள், ஐ.நா மனித உரிமைகள் பிரகடனம், பத்திரிகை சுதந்திரத்திற்கான விண்ட்ஹோக் பிரகடனம் போன்ற உலகளாவிய முக்கிய ஆவணங்களும் இடம்பெற்று வருகின்றன. தற்போது புதிதாக 74 ஆவணங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த சிறப்பை விளக்கமாக தெரிவித்த மத்திய கலாச்சார அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், “இந்த அங்கீகாரம், நமது நாட்டின் நாகரிக ஞானத்தையும் கலைச் சிறப்பையும் உலகம் முழுவதும் எடுத்துச் சொல்லுகிறது” என தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பை வரவேற்ற பிரதமர் மோடி, “நம்முடைய பன்முகமான கலாச்சாரம் மற்றும் ஆழமான ஞானத்திற்கு இது ஒரு உலகளாவிய அங்கீகாரம்” என குறிப்பிட்டு, அனைத்து இந்தியர்களும் பெருமைப்படும் தருணம் எனக் கூறியுள்ளார்.